சுட்டெரிக்கும் சூரியனையும்
சில்லென்று உணர்ந்ததுண்டு,
கைவிரல்கள் பற்றி கடற்கரையோரம் நடந்தபொழுது...
சிலிர்க்கும் இரவினை
சுடும் நெருப்பாய் அறிந்ததுண்டு,
அருகருகே இருந்தும் மௌனித்து பயணித்த பொழுது...
விளையாட்டில் தோற்றும்
வேதனையின்றி மகிழ்ந்ததுண்டு,
என்னைத் தேற்றுவதற்கு நீ வந்த பொழுது...
கசக்கும் பாகற்காயையும்
இனிப்பாய் சுவைத்ததுண்டு,
உனக்கு பிடித்தவை என தெரிந்த பொழுது...
இரவின் நீளத்தை
சிறிதோ என எண்ணியதுண்டு,
என்னவளாய் இன்று நீ ஆன பொழுது...