Friday, 31 July 2009

பெண்ணே உன்னால்...

கிறுக்கல்கள் கூட கவிதையாகிறது
உன்னால் இயற்றப்பட்டதினால்...
களிமண் கூட கவிதையாகிறது
உன்னால் படைக்கப்பட்டதினால்...
பெண்ணே...
இப்பொழுது புரிகின்றது,
இந்தக் கவிஞனும் பித்தனானது...
உன்னால் வஞ்சிக்கப்பட்டதினால் தானோ?!?!

Wednesday, 29 July 2009

என் ஆசைகளின் நேரம்மழையாய் இருக்க ஆசை தான்,
உன் இதழ் மேல் விழும்
மழை துளிகளாய்...
காற்றாக இருக்க ஆசை தான்,
உன் இடை கொஞ்சும்
இனிய தென்றலாய்...
கவிதையாக இருக்க ஆசை தான்,
உன் எழில் பற்றி இயற்றப்பட்ட
கவித் துளிகளாய்...
காதலாக இருக்க ஆசை தான்,
உன் உள்ளமெல்லாம் நிரம்பி வழியும்
உயிர்க் காதலனாய்...
கனவுகள் காணும் காலம் கடந்துவிட்டது, நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது...கண்ட கனவுகளை மெய்பிப்போம், வாருங்கள் தோழர்களே!...

Thursday, 9 July 2009

செல்லமடி நீ எனக்குபார்த்துப் பழகின கண்கள் தான்
பேசிப் பழகின இதழ்கள் தான்
தொட்டு அணைத்த உடல் தான்
கூடிச் சிரித்த அதே சிரிப்புத் தான்...
ஆனால்,
என்றும் சலிக்காத
செல்லமடி நீ எனக்கு...

Tuesday, 7 July 2009

என் காதல்காத்திருந்த காலங்கள்
கடந்து விட்டதடி
சேர்த்து வைத்திருந்த நினைவுகள்
சிதைந்து விட்டதடி
எழுதி வைத்த காதல் வரிகள்
மறந்து விட்டதடி
தொலைத்த என் இதயம் கூட
கந்தலாய் கிடைத்து விட்டதடி
ஆனால்
பூத்த அந்த காதல் மட்டும்
முள்ளாய் உருத்துதடி
என் இதயத்தில் இன்னமும்...

அழகே என்னை கொல்லடி...துடித்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் இதயத்தை...
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் விழிகளை...
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் எண்ணங்களை...
மீதம் இருப்பது என் உயிர்தானடி
அதையும் பறித்துக் கொள்!
சிரித்தபடி போய்
கோள் சொல்கிறேன் கடவுளிடம்,
அவன் அழகிய படைப்பின் விளைவுகள் பற்றி...

Sunday, 5 July 2009

காலம் கடந்து செல்வோம்...கரம் பிடித்து அழைத்து செல்ல நானிருக்கிறேன்,
காலம் கடந்து செல்வோம் வா...
ஷாஜகான் கட்டுவதாய் இருந்த
இரண்டாம் காதல் சின்னமாம்
கருப்பு தாஜ்மகாலை கட்டிட
உதவி செய்திடுவோம்...
அம்பிகாபதியும் அமராவதியும்
அமைதியாய் வாழ
வழி புனைவோம்...
லைலாவும் மஜ்னுவும்
அன்புடன் இல்லறம் ஏற
வகை செய்வோம்...
அப்படியேனும் இக்காலத்தில்
காதல்
தோல்வி நிலைகள் கடந்து
மதம், பொருளாதார வேறுபாடுகள் மறைந்து
வெற்றி வகை சூடட்டும்,
வேற்றுமைகள் மறையட்டும்,
புதிய அன்பு உலகம் மலரட்டும்...
வா அன்பே, காலம் கடந்து செல்வோம்
புதிய காதல் சரித்திரம் படைப்போம்...

கிறுக்கல்கள் காலம் இனி...

நான் கவிதை என்னும் பெயரில் கிறுக்கி பல மாதங்கள் ஆகிவிட்டன...இப்பொழுது மீண்டும் கவிதை வெள்ளத்தில் குதிக்கும் நேரம் வந்தாச்சு...

என்னடா blog எழுதற..ஒரே மொக்கையா இருக்கு என என் நண்பன் Ajith கடிந்து கொண்டதின் பெயரில் புதிதாய் சில சிந்தனை சிதறல்கள் விடலாமென எத்தனிக்கிறேன்...

விரைவில் என் கிறுக்கல்கள் பல இந்த Blog'இல் இடம் பெரும்

எனக்கு பிடித்த வசனம்

இரணகளமான, இரத்த வெள்ளம் நிறைந்த படங்களை இயக்கிய சிறந்த Director'ஆன Quentin Tarantino அவர்களின் மிக சிறந்த படைப்பு Pulp Fiction.
அந்த திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் படம் முழுவதும் இந்த வசனத்தை பலவிதமான தருணங்களில் பலவிதமான முக பாவனைகளுடன் கூறுவார். அந்த கதாபத்திரத்தில் நடித்தவர் பெயர் Samuel.L.Jackson.அந்த வசனம், என்னை மிகவும் கவர்ந்த வசனம்...

"The path of the righteous man is beset on all sides by the inequities of the selfish and the tyranny of evil men. Blessed is he who, in the name of charity and good will, shepherds the weak through the valley of the darkness. For he is truly his brother's keeper and the finder of lost children. And I will strike down upon thee with great vengeance and furious anger those who attempt to poison and destroy my brothers. And you will know I am the Lord when I lay my vengeance upon you."

குறிப்பு: இந்த வசனமானது பைபிளில் வரக்கூடிய வசனம், Ezekiel 25:17