Sunday, 5 July 2009
காலம் கடந்து செல்வோம்...
கரம் பிடித்து அழைத்து செல்ல நானிருக்கிறேன்,
காலம் கடந்து செல்வோம் வா...
ஷாஜகான் கட்டுவதாய் இருந்த
இரண்டாம் காதல் சின்னமாம்
கருப்பு தாஜ்மகாலை கட்டிட
உதவி செய்திடுவோம்...
அம்பிகாபதியும் அமராவதியும்
அமைதியாய் வாழ
வழி புனைவோம்...
லைலாவும் மஜ்னுவும்
அன்புடன் இல்லறம் ஏற
வகை செய்வோம்...
அப்படியேனும் இக்காலத்தில்
காதல்
தோல்வி நிலைகள் கடந்து
மதம், பொருளாதார வேறுபாடுகள் மறைந்து
வெற்றி வகை சூடட்டும்,
வேற்றுமைகள் மறையட்டும்,
புதிய அன்பு உலகம் மலரட்டும்...
வா அன்பே, காலம் கடந்து செல்வோம்
புதிய காதல் சரித்திரம் படைப்போம்...
Subscribe to:
Post Comments (Atom)
kavitha...kavitha...
ReplyDeleteenna boss, delhi la eathavathu jala-bula-jax achu pola.... kavithai aruviya kottuthu!!!!
besh besh... ungal sevai delhikku thevai :-)
அப்படிலாம் இல்லப்பா...ஏதோ சும்மா try பண்ணேன்...ஏதோ என்னால் முடிந்த சேவை தமிழுக்கு...
ReplyDelete