Sunday, 22 January 2012

3 (மூன்று) பாடல்கள் - என் பார்வையில்



இது வரை திரையில் நான் பார்த்து ரசித்த/ வெறுத்த திரைப்படங்களை பற்றி தான் இங்கே விமர்சனம் செய்திருக்கின்றேன். முதல் முறையாக பாடல்களை விமர்சனம் செய்கிறேன். தனுஷின் ரசிகன் என்பதையும் மீறி இந்த பாடல்களில் பல அம்சங்கள் என்னை கவர்ந்துவிட்டன. 

இசை: அனிருத் ரவிசந்தர்
பாடல்கள்: தனுஷ்

பாடல்களை இணையத்தில் கேட்க இங்கே சொடுக்கவும் - http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003277
இனி விமர்சனத்திற்கு செல்வோம். 

பாடல் 1: A Life Full of Love
இது ஒரு theme music. மிகவும் மென்மையாக மெல்லிய சோக இழையுடன் செல்லும் இந்த இசை அநேகமாக Title Music'ஆக இருக்க கூடும். சோகமான Violin Bit அந்த நமக்கு அபூர்வ சகோதரர்களை ஞாபக படுத்துகிறது. எனினும் மெல்லிய இனிமையான கீதம்.

பாடல் 2: Come on Girls - Celebration of Love
பாடியவர்கள்: அனிருத் ரவிசந்தர், நடிஷா தாமஸ், மாளவிகா
வித்தயாசமான வாத்தியங்களுடன் ஒரு ஜாலி பாடல். இது கானாவிலும் இல்லாமல் குத்து பாடலிலும் சேராமல் ஒரு விதமாக நிற்கிறது. அனிருத் மற்ற இசை அமைப்பாளர்களைப் போல தான் இசையில் தானே பாடியிருக்கிறார். அவர் Come on Girls'என பாடுவதும் அதற்கு Chorus பெண்கள் la la la'என பாடுவதும் சிரிப்பை வரவழைக்கின்றன. இது கணவன்மார்களுக்கு அறிவுரை சொல்வதைப் போல் அமைந்துள்ளது. மற்றபடி சொல்வதற்கு பாடல் வரிகள் பிரமாதமில்லை. 

பாடல் 3: இதழின் ஓரம் - The Innocence of Love
பாடியவர்கள்: அஜீஷ், அனிருத் ரவிசந்தர்
இது ஒரு யான காதல் பாடல். அஜீஷ் முழுப் பாடலையும் பாட ஹம்மிங்கை தான் கையில் வைத்து கொண்டார் இசை அமைப்பாளர். இது கண்டிப்பாக இளைர்களால் முனுமுனுக்க படப் போகும் பாடல்

எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்,
நீ சம்மதித்தால் நான் நிலுவையும் தருவேன்,
உன்நிழல் தரைப்படும் தூரம் நடந்தேன்,
அந்த நொடியை தான் கவிதையாய் வரைந்தேன்...

இது குறிப்பிடப்பட வேண்டிய வரிகள். அருமை. 

பாடல் 4கண்ணழகா - The Kiss of Love
பாடியவர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன்
எனக்கு ஸ்ருதியின் குரல் அவ்வளவாக பிடித்ததில்லை. பாடல் ஆரம்பத்தில் ஆண் குரல் தனுஷின் குரல் போன்றே தெரியவில்லை. ஆனால் இந்த பாடலை இருவரும் அருமையாக பாடியிருக்கிறார்கள். மென்மையான காதல் பாடல். காதலி காதலனை புகழ்வதும் பதிலுக்கு காதலன் காதலியை பேரழகி என புகழும் வழக்கம் பாடல் தான் என்றாலும் தனுஷ் கையாண்ட வார்த்தைகள் பாடலின் பெரிய பலம். Of course இசையும். 

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயிரினில் பெரிதாய் இல்லையடி...
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகினில் அழகாய் இல்லையடி...

உனக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன், 
உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்...
இதழும் இதழும் இணையட்டுமே
புதிதாய் வழிகள் இல்லை...

மென்மையான எனினும் காதல் ரசம் சொட்ட எழுதப் பட்ட வரிகள். கவிஞர்களுக்கும் காதலில் விழுந்தவர்களுக்கும் இதன் தாக்கம் இருக்கும். நிச்சயம் இந்த பாடலை இரு முறைக்கு மேல் கேட்பார்கள். பலே தனுஷ் பலே. பாராட்டுக்கள். 'அடிடா அவள, ஒதடா அவள' என எழுதிய அதே தனுஷ் தன இப்படி ஒரு காதல் பாடல் எழுதி இருக்கிறார். அதற்கு நொட்டை சொல் சொன்னவர்கள் இதற்க்கு விமர்சனம் செய்யாமல் எங்கே போனார்களோ?

பாடல் 5: நீ பார்த்த விழிகள் - The Touch of Love
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன்

விஜய் யேசுதாஸ் இது போல பல மெலடி பாடல்கள் பாடி இருப்பதால் அதன் தாக்கம் நம்முள் இருக்கிறது. அதை உதறி விட்டு மேலே பாடலை கவனிக்க அருமையான பாடல் உருபெறுவது தெரிகிறது. வேதாவின் குரல் மெல்லிய தென்றல். 

நிஜமடி பெண்ணே 
தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட,
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக...

ரசிக்கப் படவேண்டிய வரிகள் இவை..

பாடல் 6: போ நீ போ - The Pain of Love
பாடியவர்கள்: மோஹித் சௌஹான், அனிருத் ரவிசந்தர்
இப்படி ஒரு சோகப் பாடலை ஏன் தமிழ் தெரியாத வடஇந்தியர் ஒருவரை பாடவைத்திருக்கிறார் அனிருத் என் புரியவில்லை. ஒரு வேலை அவருக்கு தமிழ் தெரியுமோ. சுக்விந்தர் சிங், உதித் நாராயண் போல் இல்லாமல் இவர் உச்சரிப்பு நன்றாகவே இருக்கிறது. பாடலுக்கு பொருத்தமாகவே உள்ளது. பாடலில் Humming'கிற்கு பதிலாக தனுஷை அங்கங்கே உச்ச சாயலில் கத்த வைத்திருக்கிறார்கள். காதல் வலியாம். ஹ்ம்ம், அது சரி. இதுவும் ஒரு புது முயற்சி தானே.

தனியாக தவிக்கின்றேன், துணை வேண்டாம் அன்பே போ...
பிணமாக நடக்கின்றேன், உயிர் வேண்டாம் தூரம் போ...
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ...
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ...

காதல் வலி சொல்ல இந்த வரிகளே போதும். அருமை தனுஷ். 

பாடல் 7: போ நீ போ Remix - The Scream of Love
பாடியவர்கள்: மோஹித் சௌஹான், அனிருத் ரவிசந்தர்
ஹிந்தி படங்களை போல சோக பாடல்களை Original இசை குருந்தகடுகளிலேயே remix செய்து வெளியிட்டு விடுகிறார்கள். அதிரடி Guitar இசையுடன் Fast trackஆக செய்யப் பட்டிருக்கிறது. மற்றபடி அதே பாடல் தான். 

பாடல் 8: The Rhythm of Love
இன்னொரு Theme Music என்று சொல்லலாம். புல்லாங்குழலின் நாதம் மிக அருமை. G.V.பிரகாஷின் தாகம் இந்த இசையில் தெரிகிறது. 

 பாடல் 9: The Theme of 3
இருக்கிற இரண்டு Theme music பத்தாதென்று தனியாக ஒரு bit இசை. Mandolin சீனுவின் வாசிப்பு அருமை.

பாடல் 10: Why this கொலைவெறிடி
பாடியவர்: தனுஷ்
இந்த பாடலுக்கு அறிமுகமே தேவை இல்லை. உலகமெங்கும் பரவி தனுஷுக்கு பேரும் புகழும் பெற்று தந்த பாடல். உலகமே தமிழ் சினிமாவை திரும்பி பார்த்திருக்கிறது. சிலர் இந்த பாடலை குற்றம் சொல்லி விளம்பரம் தேடிக் கொண்டனர் என்பது வேற விஷயம். முதலில் இந்த பாடல் இணையத்தில் leakஆன பொழுது மிக அமைதியாக பாடல் வரிகள் புரியும் வகையில் அமைந்திருந்தது. பின்னர் வந்த Finished Versionஇல் மிகவும் இரைச்சலாய் இருப்பதாய் தோன்றியது. ஆனால் போக போக இதுவே பழகி விட்டது. 'அப்படி போடு' பாடலுக்கு பிறகு வட இந்தியாவில் ஒரு தமிழ் பாடல் ஒலிக்கிறதென்றால் அது கொலைவெறி பாடல் தான். 

இந்த பாடலில் எல்லாமே ஆங்கில வார்த்தைகள் தானே. அதனால் kurippidum படியான கவித்துவம் ithil illai. எனினும் முழுமையான பாடல் வரிகள் தெரிய இங்கே சொடுக்கவும் - http://magicalsongs.blogspot.com/2011/11/why-this-kolaveri-di-lyrics-dhanush-3.html

'Rythm correct','Maintain please', Super Maama, மாமா Notes எடுத்துக்கோ அப்படியே கைல Snacks எடுத்துக்கோ, Only English ah...என பாடலுக்கு இடை இடையே தனுஷ் பேசும் வார்த்தைகள் பாடலுக்கு additional attraction. Soup Song என்பதற்கு கரணம் சொன்னார் தனுஷ். Soup பாய்ஸ் என்றால் காதலில் தோல்வி அடைந்தவர்கள். Soup song என்றால் காதலில் தோற்றவர்களுக்கான பாடல் என்று. ஆனால் ஏன் Flop Song என்று கூற வேண்டும். What a Change over மாமா என தனுஷ் கூறும் வரிக்கு முன் வரும் மேள சத்தம் "வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை" பாடலில் வரும் மேள சத்தம் போலவே இருக்கிறது. எல்லாம் Inspiration தான் போல. 

புதுமுக இசை அமைப்பாளர் என தெரியாத வகையில் அருமையாக இசை அமைத்து இருக்கிறார் அனிருத். இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது. தனுஷிடம் இன்னும் பல அருமையான கவித்துவம் மிக்க பாடல்களையும் ஜனரஞ்சகமான பாடல்களையும் எதிர்பார்க்கிறேன். மொத்தத்தில்  இதழின் ஓரம், கண்ணழகா, நீ பார்த்த விழிகள் - இவை மூன்றுமே இனிமையான காதல் கீதங்கள். பூ நீ போ - மெல்லிய சோக கானம். Come on Girls, Why this கொலைவெறிடி - குத்து பாடல்கள். மொத்தத்தில் அணைத்து பாடல்களுமே என்னை கவர்ந்துவிட்டன. 

Wednesday, 18 January 2012

இரவும் அவளும்...


வாச மலர்களை மொத்தமாய்
என் மேல் கொட்டிவிட்டு
முடிந்தால் உறங்கிப்பார் என்று
கேலி செய்கிறான் காமன்..
உன் கூந்தல் நறுமணத்தில் கிறங்கிப் போனவனுக்கு 
இது எம்மாத்திரமென நினைத்து
உன் கூந்தல் கலைக்கிறேன்
உன் உறக்கம் கலைக்காமல்...

முன்நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன்
வானத்து நட்சத்திர பெண்கள்
கண்கள் சிமிட்டி பரிகசிக்கின்றன
'பாரடி இவன் அதிர்ஷ்டத்தை
நம்மோடு இருந்த தேவதை ஒன்று
அவன் நெஞ்சின் மேல்
உறங்கிக் கொண்டிருக்கிறாள் இன்று...

காமனுக்கும் நட்சத்திர கண்ணிகைகளுக்கும்
என் புன்னகையை பதிலாய் தந்துவிட்டு
அடுத்து வரப் போகும்
நிலா மற்றும் தென்றல் தோழிகளின் வருகையை
எதிர்பார்த்து புன்னகையுடன் காத்திருக்கிறேன்...
இவை ஏதும் அறிந்திடாமல்
என் நெஞ்சப் பஞ்சணையில் உறங்கும்
உன் கன்னங்களை மெல்ல நான் கிள்ள
செல்லமாய் சிணுங்கிவிட்டு
மீண்டும் உறங்கிப் போகிறாய் நீ...