Thursday, 3 May 2012

என் நண்பனுக்காக...



என் நட்பின் நங்கூரம் 
உன்னுள் ஆழ புதைந்திருக்கிறது... 
என்மேல் நீ கோபப் பட்டாலும் 
துரைமுகத்தே நிற்கும் 
அலை அடித்த கப்பலை 
ஆடி அசைவேனே ஒழிய 
உன்னை விட்டு விலகி செல்லேன்...

எல்லாம் நமக்காக...



வெறுமையாய் தெரிந்த உலகம்
இன்று பச்சை பசுமையாய்
பழகிப்போன பாடல்கள் எல்லாம் 
இன்று புதுப்புது அர்த்தங்களுடன்
வெறித்து பார்த்த வெண்மேகங்கள்
இன்று சிரித்துவிட்டு செல்கின்றன...
எல்லாமே மாறிவிட்டது
நம் காதலால்...
இங்கே உலவும் அனைத்தும் 
நமக்காகவே படைக்கப்பெற்றன
நம் மகிழ்சிக்க்காகவே...
வா அன்பே,
உலகை வலம் வருவோம்
வெற்றிக்களிப்பில் மிதந்து வருவோம்...