Thursday 20 May 2010

கவிதையான காதல் கதை - எப்படி ஆரம்பித்தது?

பள்ளி காலம் முடிந்து
பருவ காலமாய் ஆரம்பித்தது
அந்த கல்லூரி வாழ்க்கை
முதல் நாளே பார்த்த உன்னை
மனதில் பதிக்க வெகு நாளாகவில்லை
ஒரே வகுப்பிலிருந்தும்
ஒரு வருடம் பேசிக் கொள்ளவேயில்லை...
பின்பு ஒரு நாள்
என்னைப் பார்த்து மெல்லிதாய் சிரித்தாய்
அன்றே புது ஜென்மம் எடுத்தேன்,
கல்லூரி முடிந்த மாலை வேளைகளில் இறந்து
மறுநாள் காலை வேளைகளில் பிறந்தேன்...

ஒரு நாள் எதற்காகவோ பேசிக் கொண்டோம்
பின்னர் பழக அரமபித்தோம்...
அது என்ன மாயமோ தெரியவில்லை,
ஊரெல்லாம் வாய் பேசும் நான்
உன்னிடும் மட்டும் வார்த்தை வராமல் தவித்தேன்
புரிந்து கொண்டேன் இது காதல் என்று
நட்பை கொச்சை படுத்தாமல்
நடந்து கொள்ள போராடினேன்
ஒன்றாய் சிரித்தோம்,
ஒன்றாய் அழுதோம்
காலங்கள் சென்றன
நம் காதலும் வலு பெற்றது
ஆனால் சொல்லத்தான் இயலவில்லை
என்னிடம் நீயும் உன்னிடம் நானும்...

3 comments:

  1. adada enna oru kavidhai...nee eppadi than ippadi yosikkiriyo.hmm..unakku karpanai adigam sab..

    ReplyDelete
  2. Nandri..Nandri..Ellam thana varrathu than.Intha kvithaiyaana Kaathal kathaiya seekiram mudikkanum...

    ReplyDelete
  3. Arun Veerakesavelu28 July 2010 at 22:13

    அட... சபரி எப்போ கவியாருசுவின் தத்துபிள்ளயா ஆனா.... பின்ராபா..... பின்ரா.......

    இது எல்லாம் நோட் பன்னுகபா நோட் பன்னுகபா.....

    கவிதை.... கவிதை....

    ReplyDelete