விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ப்ரித்விராஜ், பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என பெரிய நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கி சிரத்தையுடன் மணிரத்னம் இழைத்திருக்கும் சித்திரம் தான் ராவணன். இந்த வருடத்தில் மிக பெரிதாக எதிர்பார்க்கப் பட்ட படங்களில் ஒன்று. எல்லாரும் எதிர்பார்த்தது போல மிகவும் பழகிய ஒரு கதை களம். A.R.ரஹ்மானின் சிறந்த இசை விருந்துடன் ஒரு திரை காவியம்.
எடுத்த எடுப்பிலேயே Police வண்டிகளை தாக்குதல், கூடாரத்தை அழித்தல், ஆள் கடத்தல் என படம் வேகம் எடுக்கிறது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பார்க்கும் நமக்கு குழந்தைக்கு பாடம் சொல்வது போல் கதை சொல்கிறார் மணிரத்னம். திரைக்கதை பின்னல் மிகவும் பலமாய் இருப்பதால் கதையை பற்றி பெரிதும் கவலை படாமல் "என்ன தான் அப்படி ஒரு Modern ராமாயணம்?" என ஆர்வமாய் நாம் பார்க்க துவங்கும் நேரத்தில் தான் வீராவின் வீர சாகசங்களும், ராகினியின் போராட்டமும், தேவ்'இன் Police நடவடிக்கைகளும் என அல்லோல கல்லோலப்பட்டு விடுகிறோம் நாம். ராகினியின் தைரியத்தையும் துணிச்சலையும் பார்த்ததும் மனதில் மெல்ல ஒரு ஓரமாய் காதல் பூக்கிறது வீராவுக்கு. தப்பிக்க முயற்சி செய்யும் ராகினியை இழுத்து கொண்டு ஒவ்வொரு இடமாய் செல்கிறார் வீரா. அவரை பின் தொடர்ந்து தேவ்'உம் அவரது STF Police படையும்.
விக்கிரமசிங்கபுரம் - திருநெல்வேலி பக்கமாய் இருக்கும் இந்த ஊரைய கட்டி அல்லும் பெரிய தலை தான் 'வீரா' என்கிற 'வீரய்யா'. இதை தட்டி கேட்க வரும் பொறுப்பான Police அதிகாரியான தேவ் பிரகாஷ் வீராவின் தங்கை திருமணத்தின் போது, வீராவை சுடுகிறார். தப்பித்த வீராவை தேடும் Police வீராவின் தங்கை வெண்ணிலாவை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று உருக்குலைத்து அனுப்பி வைக்கிறது. இதை கண்டு பொங்கி எழுந்து தான் தேவி'இன் மனைவி ராகினியை கடத்துகிறார் வீரா. இதை தான் இடைவேளைக்கு பிறகு வரும் Flashback காட்சிகள் விளக்கமாய் உரைக்கின்றன.
பல போராட்டங்களுக்கு பிறகு தான் தம்பியை கொன்ற தேவ்' இடமே ராகினியை தந்துவிட்டு தப்பி செல்கிறார் வீரா. 14 நாட்களாய் வேறொரு ஆடவனுடன் இருந்த தன் மனைவியை சந்தேகப்படுகிறார் தேவ். இதை கண்டு கொதித்தெழும் ராகினி வீராவிடமே திரும்பி செல்கிறார். வீரா ராகினியை ஏற்று கொண்டாரா? வீராவுக்கு என்ன ஆயிற்று? தேவ் வீராவை பிடித்தாரா இல்லையா? என்பது தான் Climax.
இது சில மாற்றங்கள் நிறைந்த ஒரு நவீன கால ராமாயணம் என கொண்டால் அவர்களின் Start cast இதோ:
ராமன் - ப்ரித்விராஜ் - தேவ் பிரகாஷ்
சீதை - ஐஸ்வர்யா ராய் பச்சன் - ராகினி
ராவணன் - விக்ரம் - வீரய்யா
கும்பகர்ணன் - பிரபு - சிங்கராசன்
விபீஷணன் - முன்னா - சர்க்கரை
சூர்பனகை - ப்ரியாமணி - வெண்ணிலா
ஜடாயு - ஜான் விஜய் - ஹேமந்த் குமார்
ஹனுமான் - கார்த்திக் - ஞான பிரகாசம்
Forest Officer'ஆய் வரும் கார்த்திக், சிங்கராசுவாய் வரும் பிரபு, பிரபுவின் மனைவியாய் ரஞ்சிதா, வீரவின் தங்கையை வரும் ப்ரியாமணி என அனைவரும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். சர்க்கரையை வரும் முன்னாவும், ஹெமந்தாய் வரும் ஜான் விஜயும், அரவாணியாய் வரும் வையாபுரியும் கூட சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
இசை புயலின் தயவால் பாடல்கள் அனைத்தும் அருமை. "கள்வரே" பாடல் எனக்கு கேட்க்கும் போது பிடிக்கவில்லை என்றாலும் பார்க்கும் போது பிடித்து விட்டது. அருமையான நடனம். ஆனால் அவர் ரொம்பவே "Drums" சிவமணியை இந்த படத்தில் பயன்படுத்திவிட்டார். பல இடங்களில் நன்றாய் இருந்தாலும் சில இடங்களில் தலை வலிக்கிறது. போதாகுறைக்கு விக்ரம் வேறு "பக் பக் பக் பக்" என கூவி "கந்தசாமி"யை நினைவுபடுத்துகிறார். Climax'இல் இரண்டு பாடல்கள் புதிதாய் இடம் பெற்றுள்ளன. ஒன்று "கலிங்கத்து பரணி" பாடல், மற்றொன்று "நான் வருவேன்" என இசை புயலின் உருக்கும் குரலில். அந்த கடைசி பாடலுடன் படம் முடியும் போது மனதில் ஒரு அழுத்தம். V.மணிகண்டன் மற்றும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் இந்தியாவா இது என நாம் வியக்கும் வண்ணமாய் இருக்கிறது காட்சிகள். ஆனால் ஒரே ஈரமாய் இருக்கிறது படம் முழுதும். ஈரம்-2 என வைத்திருக்கலாமோ?
ஐஸ்வர்யா அவர்களின் ஆடை அலங்காரம் படு கேவலம். அந்த கொடுமையை என் வாயால் சொல்ல முடியாது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சுகசினியின் வசனங்களில் ஆழம் இல்லை. ராகினியின் வீரத்தை பார்த்து பிரமிக்கும் வீரா அவர் மாற்றான் மனைவி என்பதை மறந்து தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்கிறார். அதற்கான வசனம் "எங்களோடவே தங்கிடுறீயலா?". மணிரத்னம் எழுதி இருந்த இந்த வசங்களின் ஆழமும் அர்த்தமும் வேற. அவரது படங்களின் பலமே குறைவான ஆழமான பாதி வசனங்கள் தான். மணிரத்தினம் படங்களில் அவர் மனைவி தலையிடலாம் ஆனால் அது இப்படி சொதப்பி வைக்காத வரை மட்டுமே.
மணிரத்னத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கண்டிப்பாக முதல் இடம் இல்லை. மௌன ராகம், நாயகன், தளபதி...என பெரிய வரிசையில் கடைசிக்கு கொஞ்சம் முன்னே வரக்கூடும், அவ்வளவே. ஏனைய இயக்குனர்களுடன் Compare செய்தால் இது இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று.
hey sabby oru idathila varthai mistake(thangachi) nee thambinu potirukka paru...approm thistype of approach is also good way of writing the review...saying the char names below..nice da...this time ur review is good.nicely written with good use of tamil words.nice innovation..keep doing like this....
ReplyDeletesuper na
ReplyDeleteThanks Jana...And Thanks Gowww...I will change the corrections and I'm glad you liked the way I wrote :)
ReplyDeleteநன்றாக இருதது சபரின் விமர்சனம்... I was wondering , how சபரி molded him self like a reporter... Keep the movementum going...
ReplyDeleteBy
Arun.V
Thanks Arun. I always had interest in telling stories to people. athanala kooda irukkalam...
ReplyDelete