என் இமைகள் தேடி நீ கொடுத்த
முத்தச் சத்தம் ஓய்ந்திருக்கவில்லை,
உன் இதழ்கள் தேடி நான் பதித்த
முத்த ஈரம் காய்ந்திருக்கவில்லை,
ஆனால் நேற்று பரிமாறிக் கொண்ட
நம் இதயத்தில் ஒன்று மட்டும்
ஏனோ சத்தம் இல்லாமல் நின்று விட்டிருந்தது.
காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்
இந்த கயவன் செய்த செயலை அறியாமல்...
பழுதாய் போன
இந்த கயவனின் இதயத்தை
காதல் கடனாய் பெற்றாய்,
அது கஷ்டப்பட்டு துடித்து
இன்று ஒரு வழியாய் நின்றும் விட்டது
உன் இதயம் மட்டும்
என்னுளே இன்னும் பத்திரமாய்...
நான் வாழும் சொற்ப காலமும்
நினைவில் கொள்வேன்
பறித்துக் கொண்ட
உன் இதயத்தின் பாவத்தையும்
பறி கொடுத்த
என் இதயத்தின் தவறையும்....
enakku ithu padikkave kazhtama irukku..hey plz inime rombha santhosama ezhuthu da...antha photo engirunthu pudichito heriyala rombha bayama irukku..inime ivlo sogamellam vendam...
ReplyDeleteEllam kalanthu thane ezhuthanum. Eppa paathalum jollyavey ezhutha mudiyuma...Seri inimey sogamana poems'a kammi pannikaren...
ReplyDeletekavidhai nalla irukku.But enaku pic pidikalai.Kavidhaiyoda picture paarkum podhu romba kashtama irukku.Plzzzzzzz change that pic.
ReplyDeleteSabarikulla ipadi oru kavinjan irukaanu enaku ivalo naala theriyama poiduchu.Gud work.keep it up :)
Thanks Nithya. Nalla picture kedaicha madthidren. Kavigan'lam solla matten. But I'm trying...
ReplyDelete